இருள் சூழும் நேரம்
irul soozhum neram
இருள் சூழும் நேரம் ஒளி மங்கும் காலம் நான் என்ன செய்வேன் என்று நினைக்கையில் ஒளியாய் வருவீர் வழியைத் திறப்பீர் திறந்த வாசல் உனக்கு உண்டு என்றீர்
பல்லவி
திறந்த வாசல் எனக்குண்டு திறந்த வாசல் எனக்குண்டு தேவன் திறந்திட்டதை ஒருவரும் அடைக்கமுடியாதே திறந்த வாசல் எனக்கு நிச்சயம்
தனிமையின் நேரம் துணை யாருமின்றி கலங்கி நான் நிற்கும் போது பயம் வேண்டாம் என்று பெலன் தந்திடுவீர் அதிசயங்கள் கண்டிட செய்வீர்
பல்லவி
திறந்த வாசல் எனக்குண்டு திறந்த வாசல் எனக்குண்டு தேவன் திறந்திட்டதை ஒருவரும் அடைக்கமுடியாதே திறந்த வாசல் எனக்கு நிச்சயம்
தனியாக நிற்கும்போது என் துணையாக வந்திடுவீர் மனம் நொந்த நேரத்திலும் மறுவாழ்வு தந்திடுவீர் ஒரு வழி அடைந்தாலும் புது வழி திறக்கும் தாவீதின் திறவுகோல் உடையவரே
பல்லவி
திறந்த வாசல் எனக்குண்டு திறந்த வாசல் எனக்குண்டு தேவன் திறந்திட்டதை ஒருவரும் அடைக்கமுடியாதே திறந்த வாசல் எனக்கு நிச்சயம்