இறுதி நாளும் வந்திட்டதே
irudhi naalum vandhittadhae
இறுதி நாளும் வந்திட்டதே பிரிந்து சென்றிடும் நேரம் இதே-2 எத்தனை பேரின்பம் இயேசுவை அறிந்தேன் முடிவு மோட்சமே நித்திய ஜீவன் தானே-2
நல்ல போராட்டத்தை போராடினேன் ஓட்டத்தை ஜெயமாய் முடித்தேனே-2 உண்மையும் உத்தமும் உள்ள ஊழியனே என்று என்னை அழைப்பார் கட்டி அணைத்திடுவார்-2
அந்நிய கண்களால் அல்லவே என் சொந்த கண்களால் பார்ப்பேனே என் மீட்பரோடு நான்இருப்பேனே நித்திய காலமும் வாழ்வேனே-2