இறுதி இராப்போஜன விருந்ததிலே
irudhi iraappojana virundhadhilae
இறுதி இராப்போஜன விருந்ததிலே இரட்சகர் வீற்றிருந்தார் இயேசு பன்னிரு சீஷருடனே
1. அப்பமதை எடுத்தவர் ஆசீர்வதித்ததை பிட்டுத் தந்தார் எந்தன் சரீரம் இதுவே என்றே பரிமாறினார் – இறுதி
2. பாத்திரத்தில் நவரசம் பாவத்தைக் கழுவின தூய இரத்தம் இரட்சண்ய புது உடன்படிக்கையே இதைப் பானம் பண்ணினார் – இறுதி
3. அன்பின் சீஷன் ஆறதலாய் அண்ணலின் மார்பினில் சாய்ந்திருந்தான் துரோகியாம் யூதாஸ் துணிக்கையும் வாங்கி தீவிரம் போய் மறைந்தான் – இறுதி
4. சரீரமாம் சபையிலே சத்திய ஆவியால் இணைத்தாரே நன்றியும் பொங்க நிலைத்து நின்றாலே நற்கருணை ஈகுவார் – இறுதி
5. கபடற்ற மனதுடன் கிறிஸ்துவின் மன்னிக்கும் சிந்தையுடன் சந்தோஷமாக சமாதானமாக பந்தியில் பங்கடைவோம் – இறுதி
6. பக்தரோடே சீயோனிலும் பிதாவின் இராஜ்ஜிய பந்தியிலும் வாஞ்சையாய் நாமும் வருகையில் சென்று விரைந்து சேர்ந்து கொள்ளுவோம் – இறுதி
Related songs
- அநாதி தேவன் உன் அடைக்கலமேanaadhi devan un adaikkalamaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரேandho kalvaariyil arumai iratsagaraeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அன்னை அன்பிலும் விலைannai anbilum vilaiSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)
- அழைக்கிறார் அழைக்கிறார் இதோazhaikkiraar azhaikkiraar idhoSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அழைத்தீரே இயேசுவேazhaitheerae yesuvaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆச்சர்யமே அதிசயமேaaccharyamae adhisayamaeSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)
- ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடிaanandha geedhangal ennaalum paadiSis. Saral Navoriji
- ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்aanandhamaay inbak kaanaan egiduvenSis. Saral Navoriji · Pazhaya Paadalgal