இரவும் கடந்தது பகல் ஒளி
iravum kadandhadhu pagal oli
இரவும் கடந்தது பகல் ஒளி உதித்தது இரக்கமும் கிடைத்தது இயேசுவிடம் இயேசுவிடம் சிலுவையிலே - 2
1. இயேசுவின் அன்பில் முழங்கி அனுதினம் ஜெபித்திடும் இன்ப பரவசமே பக்தர்கள் பாக்கியமே - 2 மாபெரும் இரட்சண்யமே மன்னவன் அருளினால் - 2 மனக்கவலை தீர்க்க வல்ல கர்த்தர் இவரே - 1
2. கிருபையும் சத்தியமும் நீதி சமாதானம் குருசினில் ஒன்றை ஒன்று சந்திக்கும் - 2 கல்வாரி மேட்டினிலே உயிர் கொடுத்தவரின் - 2 குருதியும் வடிந்ததே உனக்காக மைந்தா - 1
3. வானாதி வானங்கள் ஏறி மறைந்தவரே வருவவோனே சீக்கிரம் என்றாரே - 2 நாட்களும் நெருங்கிய கிறிஸ்த்துவே வருவார் - 2 நம்பினால் நம்மை அவர் கொண்டு சென்றிடுவாரே - 1
4. சாந்த சொரூபியே தேவ குமாரன் மாந்தர்கள் தேடும் மெய்யான தேவன் - 2 சிந்தனைக்கின்பம் சிலுவை தியானம் - 2 எந்தனை தேற்றிடும் இயேசுவின் நாமம் - 1