இரவுகள் நீளமாக தோன்றுதோ
iravugal neelamaaga thondrudho
இரவுகள் நீளமாக தோன்றுதோ பகலை காண நீ துடிக்கிறாயோ மறந்திட முடியாமல் தவிக்கிறதோ-உன் உள்ளம் நாளையை குறித்து உனக்கு கவலையோ
பல்லவி
பயந்திடாதே அப்பா இருக்கிறேன் இந்த யுத்தம் என்னுடையது கலங்கிடாதே அப்பா இருக்கிறேன் என் மார்பிலே நீ சாய்ந்திடு-2
நீ தானே என் ஆசையே செல்லம் நீ தானே நீ தானே என் ஏக்கமே நினைவெல்லாம் நீ தானே
காத்திருந்தும் கானல் நீரை காண்கிறாயோ பறந்திட முடியாமல் திகைக்கிறாயோ யாரும் இல்லை என்று கலங்கிடுதோ-உன் நெஞ்சம் உலகம் உன்னை எதிர்த்து நிற்கிறதோ
பல்லவி
பயந்திடாதே அப்பா இருக்கிறேன் இந்த யுத்தம் என்னுடையது கலங்கிடாதே அப்பா இருக்கிறேன் என் மார்பிலே நீ சாய்ந்திடு-2
நீ தானே என் ஆசையே செல்லம் நீ தானே நீ தானே என் ஏக்கமே நினைவெல்லாம் நீ தானே-2
ஆரிராரோ அப்பா இருக்கிறேன் என் மார்பிலே நீ சாய்ந்திடு-2