இரட்சிப்பு தேவையா
iratsippu thevaiyaa
இரட்சிப்பு தேவையா? இயேசுவண்டை வருவாயா? - 2 உன்னை மீட்டிடவே இரத்தம் சிந்தினாரே - 2
இயேசு இயேசு இயேசு இரத்தம் சிந்தினாரே -4
1. கல்வாரி சிலுவையில் உனக்காக பலியானாரே நம்மை தம்முடனே சேர்த்துக்கொள்வாரே 2 (இரட்சிப்பு)
2. மனுக்குலத்தின் பாவத்தை போக்கிட வந்தவர் பரலோகில் சேர்த்திட மரித்து உயிர்த்தாரே - 2
3. நம்மை ஒப்புக்கொடுப்போம் அவர் சித்தம் செய்திடவே சத்தியத்தில் நடந்திடுவோம் நித்தியத்தில் சென்றிடுவோம் 2 (இரட்சிப்பு)