இரட்சிப்பின் தேவன் என் மீட்பரே
iratsippin devan en meetparae
இரட்சிப்பின் தேவன் என் மீட்பரே இரக்கம் கூர்ந்து அணைத்தவரே
வானமும் பூமியும் படைத்த வரிடத்தில் வந்திடும் எனக்கு ஒத்தாசை என் கால்களையே தள்ளாடவொட்டார் என்னை காப்பவர் உறங்கிடாரே இஸ்ரவேலை காப்பவர் உறங்குவதுமில்லை இஸ்ரவேலை காப்பவர் தூங்குவதுமில்லை
கர்த்தர் என் பெலனும் கோட்டையுமானார் நான் நம்பும் துருகம் கேடகமும் சத்ருக்களுக்கு நீங்கலாக்கி சாட்சிகளாய் என்றும் நிறுத்திடுவாரே துதிகளுக்கு பாத்திரர் அவரே துதி பலி செலுத்தி போற்றிடுவோம்
என்னைத் தொடுவோண் தன் கண்மணியை தொடுவதாக சொன்னாரே என்னையும் தமது கரங்களாலே எல்லா நேரமும் தாங்கிடுவாரே நன்மையினால் என் வாயை நாளும் திருப்தியாக்குவார்.
சீக்கிரம் வருவேன் என்றுரைத்தவரே சீயோனில் நானும் சேர்ந்திடுவேன் களிம்புகளை நீங்கி என்னாளும் கரை திரை இல்லா வாழ்ந்திடுவேனே சிலுவையிலே என் பாவம் போக்கி சிறந்து நானும் வாழ்ந்திடுவேன்