இரட்சிப்பின் ஆனந்த சந்தோஷம்
iratsippin aanandha sandhosham
இரட்சிப்பின் ஆனந்த சந்தோஷம் காண ஓடி வா பட்சமுடனே இரட்சகரண்டை ஓடி வா.
1. பாவம் போக்கும் நதி அவர் பக்கம் நின்று ஓடுது ஆவலுடனே இரட்சகரண்டை ஓடி வா.
2. உன் பாவப் பாரம் நீக்க உதிரம் சிந்த அடியுண்டார் அன்புடனே இரட்சகரண்டை ஓடி வா.
3. கல்வாரி மேட்டில் ஐந்து காயங்காட்டி நிற்கிறார் நல் மனதுடன் இரட்சகரண்டை ஓடி வா.
4. ஆசீர்வாதத்தைக் கூறி அன்புடனே அழைக்கிறார் நேசமுடனே இரட்சகரண்டை ஓடி வா.
5. பாவி உன்னை ரூடவ்டேற்றிப் பரலோகம் விட்டாரே தாவியே நீ அவர் பாதம் தேடி ஓடி வா.