இரட்சிப்பை உயர்த்தி கூறு லோகம் நடுங்க
iratsippai uyarthi kooru logam nadunga
1. இரட்சிப்பை உயர்த்தி கூறு லோகம் நடுங்க நரகாக்கினையைச் சொல்வோம் பாவமடங்க பூர்வ கால தேவதாசர் விஸ்தரித்தார் போல் மோட்ச லோகம் போகும் முன்னே.
செல்வோம் செல்வோம் ஆர்ப்பரிப்புடனே செய்வோம் செய்வோம் போர் பலத்துடனே நானா ஜாதி பாஷைக்காரர் ரட்சிப்படைய மோட்ச லோகம் போகும் முன்னே.
2. சேனையரின் யுத்தசப்தம் பூமியெங்கும் கேள்! மீட்படைந்த பேதையரின் சாட்சிகளும் கேள்! முழு லோகத்தiயும் வெல்ல இன்னும் கொஞ்ச நாள் மோட்சலோகம் போகும் முன்னே.
3. தீதாய்ச் சத்துருக்களென்ன சொன்ன போதிலும் சுத்த ஆவியின் பலத்தைப் பெற்று யாவிலும் உண்மையாக போர் புரிந்தால் வெல்வோம் சாவிலும் மோட்ச லோகம் போகும் முன்னே.