இரட்சண்ய கொம்பாக
iratsanya kombaaga
இரட்சண்ய கொம்பாக இரட்சிப்பின் அம்பாக எப்போதும் எனக்காக இருப்பவரே
குனிந்த இடத்தில் எல்லாம் நீரே நிமிர செய்தது உம் கிருபையே இதற்கு பதிலாய் என்ன செய்வேன் உயிருள்ள நாட்கள் உம் சேவை செய்வேன்
யாவே (யெகோவா) நீர் என்றும் நல்லவரே யாவே (யெகோவா) நீர் என்றும் வல்லவரே
அபிஷேகம் பண்ணப்பட்ட தாவீதின் கொம்பை என்றும் உயர்த்தின உம்மை நான் விடுவதில்லை வறண்ட நிலத்தில் என் வாழ்க்கையும் கழிவதில்லை உன்னத ஆவி என்னில் இப்போ ஊற்றும் வரை உம்மை நான் விடுவதில்லை
2. விருத்தியடைந்திடுவேன் அறுவடை கண்டிவேன் ஈசாக்கை ஆசீர்வதித்த உம் கரத்தினால் அள்ளிதூவும் விதையை நான் கொண்டு சுமப்பதை நீர் அறிவீர் மா அறுவடையை நீர் எனக்கு தந்து மகிழ செய்திடுவீர்
3.விழுந்திட்ட கூடாரத்தை மறுபடியும் கட்டிடுவீர் பழுதான யாவையும் நீர் சீர்படுத்துவீர் ஆதி திருச்சபையின் எழுப்புதலை திரும்பவும் தந்திடுவீர் (எழுப்பிடுவீர்) பூர்வ நாட்களிலே நடந்தது போல அற்புதம் காண செய்வீர்