இரட்சணிய நாளிது
iratsaniya naalidhu
1. இரட்சணிய நாளிது வந்திடாயோ இரட்சகர் இயேசு உன்னாத்ம மீட்பர் பட்சமாய் உன்னை அழைக்கும் சத்தம் இட்சணம் கேட்டே அண்டிடுவாயே
உனக்காக மரித்தார் இயேசு உனக்காய் உயிர்த்தார் இயேசு தம் திரு நீதியாய் தரித்துன்னையே தம்மைப்போல் மாற்றுவார் தரணியிலே
2. இக்கட்டில் உன் ஜெபம் கேட்டிடுவான் கட்டிடுவார் உன் ஆறாக் காயங்கள் மட்டில்லா இன்பம் ஈந்திட இன்னும் தட்டிடும் மீட்பர் கீதயம் திறப்பாய் - உன்
3. தேவாட்டுக் குட்டியாய் வந்தவரே தேகமதிலுன் நோய்களேற்றதினால் ஏக சுதன் தம் அத்தழும்புகளால் சுகமே ஈவார் தம்மாணைப்படியே - உன்
4. மேற்கொள்ளும் எவ்வித தோல்விகளும் நாற்புறம் நித்தம் சூழும் பாவங்களும் வேருடன் சாய்ந்த வெற்றியோடேக சீருடன் தமிழ் பேர் வாழ்வு பெறவே- உன்
5. வானமும் பூமியும் மாறிடுமே வானவரேசின் வார்த்தையே நிலைக்கும் வருவாய் விரைந்தே பெறவே கிருபை வாரிதிப் போல பாயுதே உனக்காய - உன்