இரத்தத்தின் சத்தம்
irathathin satham
இரத்தத்தின் சத்தம் அது சாத்தானுக்கு சவால் விடும் கெம்பீர சத்தம் (இயேசுவின்) -2 ஓடுவான் சாத்தானும் ஓடுவான் இயேசுவின் பெயரை கேட்டால் ஓடுவான் நடுங்குவான் சாத்தானும் நடுங்குவான் இயேசுவின் இரத்தத்தின் சத்தம் கேட்டால் நடுங்குவான் பயப்படாதே மகனே (மகளே) பயப்படாதே பயந்து வாழாதே இனியும் பயந்து வாழாதே -2
வியாதி வறுமை வேதனைகள் மறைந்துபோகும் உன் வாழ்க்கையிலே சமாதானம் உதயமாகும் -2 தோற்றுப்போன சாத்தான் உன்னை என்ன செய்ய முடியும் -2 அது ஏசுவின் இரத்தத்திற்கு பயந்து ஓடும் -2
ஜாதி மத பேதங்கள் ஒன்றுமில்லை அவர் இரத்தத்தாலே மீட்புபெற விலையும் இல்லை -2 கோடி கோடி மக்களுக்காய் மரித்த தேவன் -2 இன்றும் கண்ணீரோடு அழைக்கின்றாரே அன்பினாலே -2
கவலை கண்ணீர் கஷ்டம் எல்லாம் மறைந்து போகும் உன் ஊழியத்தின் எல்லைகள் பெரியதாகும் -2 ஆண்டவரின் வருகை நாளினிலே -2 நீயும் ஆனந்தமாய் ஆடி பாடி துதிக்கவேண்டும் -2