இரத்தம் சிந்தி நம்மை அவர்
iratham sindhi nammai avar
இரத்தம் சிந்தி நம்மை அவர் முத்தி சேர்க்கப் பிறந்தார்.
நித்தம் அவரோடு வாழச்சத்ய வழி திறந்தார் கர்த்தரே தம் பக்தர் பாவம் மறந்தார்.- இரத்தம்
1. மோசத்துக்குள்ளான என்னை யேசு சுவாமி பார்த்தார்; நாசத்திருந் தோடி வந்த நீசனையே சேர்த்தார்; நேச மீட்பர் பாசமாகக் காத்தார் காத்தார்.
2. கெஞ்சி வந்த பாவிகட்காய்த் தஞ்சமாக நின்றார்; மிஞ்சி மோசஞ் செய்யும் அந்த வஞ்சப்பேயைக் கொன்றார்; கொஞ்சமுமே அஞ்சிடாமல் வென்றார் வென்றார்.
3. பொன்னுலகத் தின்பங்களை என்னுள்ளத்தில் தந்தார்; தன்னுடன் நற்பங்கு பெற மன்னர் என் மேல் உகந்தார்; சின்னப்பட இந்நிலத்தில் வந்தார் வந்தார்.