இரங்குமேன் என் விண்ணப்பம் கேளும்
irangumen en vinnappam kelum
1. இரங்குமேன் என் விண்ணப்பம் கேளும் வாரும் மீட்பா வாரும். உம் பேரிலே என் ஆவல் அதிகம் வாரும் மீட்பா வாரும்.
பல்லவி
வெகுதூரம் அலைந்து கெட்டுப் போனேன் வெதுதூரம் அலைந்து திரிந்தேன் இப்போ என்னை உம் மந்தை சேருமே வாரும் மீட்பா வாரும்.
2. களைப்புற்றேன் தனிப்பயணத்தால் வாரும் மீட்பா வாரும் உம் புன்சிரி நான் எதிர் நோக்கின்றேன் வாரும் மீட்பா வாரும்.
பல்லவி
வெகுதூரம் அலைந்து கெட்டுப் போனேன் வெதுதூரம் அலைந்து திரிந்தேன் இப்போ என்னை உம் மந்தை சேருமே வாரும் மீட்பா வாரும்.
3. நொறுங்குண்ட இதயம் படைப்பேன் வாரும் மீட்பா வாரும் என் வேண்டுதல் உம் செவி கிட்டட்டும் வாரும் மீட்பா வாரும்.