இரக்கமே உருக்கமே
irakkamae urukkamae
இரக்கமே உருக்கமே நீடிய சாந்தமே கிருபையே மகிமையே நான் நம்பும் கோட்டையே -(2) உம்மை நான் என்றும் விட மாட்டேன் உம்மை நான் என்றும் சார்ந்திடுவேன்
எந்தன் கால்கள் சறுக்காமலும் எந்தன் நடைகளை திடப்படுத்தி நீர் என்றும் என்னுடன் இருந்தால் என் கண்ணீர்கள் என்றும் துடைக்கப்படும்
உன்னதமான தேவன் நீரே உம்மை போல தேவன் இல்லை உம் வார்த்தையால் என்னை பெலப்படுத்தி உம் கரத்தினால் என்னை தேற்றுகிறீர்
உனக்கெதிரான ஆயுதங்கள் வாய்க்காதே போகுமென்றீர் உந்தன் மதில்கள் எனக்கு முன்னே என்றும் இருந்து நடத்திடுமே