இறையாட்சி மனிதர்களே
iraiyaatsi manidhargalae
இறையாட்சி மனிதர்களே திரு இயேசுவின் சீடர்களே இறை அழைக்கின்றார் நம்மில் இணைக்கின்றார் புது உலகத்தை படைத்திட வாருங்களே
நாம் வாழும் இந்த பூமி நலமாகிட வேண்டாமா நலிவுற்றவர் வாழ்வினில் நீதி என்று நிலைத்திட வேண்டாமா-2 இயேசுவே காட்டிய வழி உண்டு நீங்கிட நமக்கொரு நெறி உண்டு-(2) எதிர் நோக்குடன் வாருங்கள் கதிர் விளைந்திடும் காலங்கள்-(2)
இன்று மானிட இதயங்களெல்லாம் ஒன்று சேர்ந்திட வேண்டாமா இறையாட்சி யின் மாற்றங்கள் எங்கும் நிறைவேறிட வேண்டாமா -2 வானிலம் முழுவதும் ஒரு குடும்பம் மாந்தர்கள் எல்லாம் உடன்பிறப்பே இந்த உண்மையாய் வாழ்ந்திடவோம் எந்த பகையினை வென்றிடுவோம்-2
கடவுளே நாங்கள் வருகின்றோம் கடவுளின் உலகம் படைத்திடவே (கரம் கோர்த்து சென்றிடுவோம் கருத்துடன் செயல்படவே) - 2