இறைவன் படைத்த நாளிதே
iraivan padaitha naalidhae
இறைவன் படைத்த நாளிதே நன்றி நன்றி பாடுவோம் இதயம் மகிழும் நாளிதே நன்றி நன்றி பாடுவோம்
நன்றி இறைவா - 4 ( 2 )
வானம் பூமி யாவுமே நன்றி கூறட்டும் வாழும் உயிர்கள் இயேசுவை வணங்கி மகிழட்டும் ( 2 ) இதயம் இன்று இனிய கீதம் பாடட்டும் பாடட்டும் - 2 இறைவன் இயேசு என்றும் நம்மைக் காப்பதால்
கவலை யாவும் மறைந்தது கலக்கமில்லையே காலமெல்லாம் கர்த்தர் இயேசு நம்மோடு உள்ளார் ( 2 ) புதிய வானம் புதிய பூமி பூத்திட - 2 புதிய பயணம் புவியில் இன்று தொடங்குவோம்