இறைவன் நமது
iraivan namadhu
இறைவன் நமது வானகத் தந்தை இதை உணர்ந்தாலே குளிர்ந்திடும் சிந்தை குறைகள் தீரும் கவலைகள் மாறும் குழம்பிய மனதில் அமைதி வந்தேறும்
1. பறவைகள் விதைப்பதும் அறுப்பதும்இல்லை பத்திரப்படுத்தி வைப்பதுமில்லை மறந்து விடாமல் அவைகளுக்குணவு – 2 வாரி வழங்கி – பேணியே காக்கும் (3)
2. வயல்வெளி மலர்களைப் பாரீர் அவைகள் வருந்தி உழைப்பதும் நூற்பதுமில்லை மயங்கிட வைக்கும் இவைபோல் சாலமோன் – 2 மன்னனும் என்றும் – உடுத்தியதில்லை (3)
3. எதனை உண்போம் எதனை உடுப்போம் எதனைக் குடிப்போம் எனத் திகைக்காதே முதலில் பரமனின் அரசின் நீதியை – 2 முனைந்து தேடிடு – சித்திக்கும் அனைத்தும் (3)