இறைவன் என்னை காக்கின்றார்
iraivan ennai kaakkindraar
இறைவன் என்னை காக்கின்றார் குறை ஒன்றும் எனக்கு இல்லையே மகிழ்ச்சி ஊட்டும் இடத்தில் வைத்து சிறகுகள் நிழலில் காக்கின்றார் (2)
புல்லும் மேய்ச்சலும் அருவியும் உள்ள பாலும் தேனும் நிறைந்த கானான் (2) அழைத்து சென்று களைப்பை ஆற்றி புத்துயிர் ஊட்டுகின்றார் (2)
தீமை துன்பம் நெருங்க விடாமல் அறனும் கோட்டையும் புகலிடமான(2) வார்த்தை கேடயம் கவசமாக காத்து வருகின்றார்(2)
இருளும் பள்ளமும் எதிரியுமான எரிக்கோ யோர்தான் தடைகளை மாற்றி(2) வாழ்வின் வழியை எனக்கு காட்டி சீயோனில் சேர்க்கின்றார்(2)