இறைவன் எனது மீட்பானார்
iraivan enadhu meetpaanaar
இறைவன் எனது மீட்பானார் அவரே எனக்கு ஒளியானார் அவரைக் கொண்டு நான் வாழ எவரைக் கண்டும் பயமில்லை ( 2 )
வாழ்வில் இறைவன் துணையானார் வாடும் எனக்கு உயிரானார் தியோர் என்னை வளைத்தாலும் தீமை அணுக விட மாட்டார் ( 2 )
தீயோர் படைபோல் சூழ்ந்தாலும் தீராப் பகையைக் கொண்டாலும் ( 2 ) தேவன் அவரைத் திடமாக தேடும் எனக்கு குறையேது