இறைவா உம் இல்லத்திலே
iraivaa um illathilae
இறைவா உம் இல்லத்திலே தங்கி வாழ்வோர் யார் இறைவா உம் திருமலையில் குடியிருப்போர் யார் ? ( 2 )
மாசற்ற வாழ்க்கை நடத்துபவன் நீதி நியாயத்தில் நிலை நிற்பவன் இதயத்தில் நேரியவை தியானிப்பவன் - 2 நாவால் எப்பழிச் சொல்லும் கூறாதவன் அயலானுக்குத் தீமை செய்யாதவன் பிறரைப் பழித்து உரைக்காதவன்
தியோரை இழிவாகக் கருதுபவன் - ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பவன் தனக்குத் துன்பம் வந்தாலும் தந்த வாக்குறுதியை மீறாதவன்