இறைவா என்னோடு பேசிடவா
iraivaa ennodu pesidavaa
இறைவா என்னோடு பேசிடவா என் இதயம் மகிழ்ந்திடவா . உனக்காய் நான் என்றும் காத்திருப்பேன் - உனைப்பாடி மகிழ்ந்திருப்பேன்
கரங்களில் என்னைப் பொறித்தாய் கண்ணின் மணியாய் காத்தாய் மகனாய் மகளாய் ஏற்றாய் மனதினில் அமைதியைத் தந்தாய் என்னில் வந்த சொந்தமாய் நின்றாய் உன்னில் என்னை இணைத்திட வந்தாய் வருவாய் ( 3 ) வரம் தருவாய் - இறைவா
நீரினில் நிலவாய் வந்தாய் வாழ்வினில் சுடராய் நின்றாய் உறவாய் எனை நீ அணைத்தாய் உயிராய் எனை நீ இணைத்தாய் விண்ணில் என்னை இணைத்திட வந்தாய் மண்ணில் பல விந்தைகளை புரிந்தாய் ! வருவாய் ( 3 ) வரம் தருவாய் - இறைவா