இறைவா எனக்கு நீர் தான்
iraivaa enakku neer thaan
இறைவா எனக்கு நீர் தான் கதி இயேசுவே எனக்கு நீ தான் வழி இம்மையிலும் மறுமையிலும் இதுவே எந்தன் மனநிம்மதி
கதி நீரே என் அதிபதியே கனம் துதியும் நான் உமக்குத் தந்தேன் யேகோவா யேகோவா யேகோவா யேகோவா யாரிடம் போவேன் யாரிடம் சொல்லுவேன் இயேசுவே நீரே எல்லாம் அல்பாவும் நீரே ஓமெகாவும் நீரே நேற்றும் இன்றும் என்றும் நீரே
பரிகாரி நீரே பரமனும் நீரே பரிசுத்த தேவன் நீரே தகப்பனும் நீரே தாயும் நீரே தன்னிகரல்லா தயாபரன் நீரே
பரலோகம் விட்டு பூலோகம் வந்த பரிசுத்த ஆவி நீரே பரமனின் அன்பால் என்னை நீர் தெரிந்தீர பரலோகம் வந்திட பரிசுத்தமாக்கிடும்
மெய்ப்பொருள் நீரே மெய்யன்பு நீரே மேசியா நீரே தெய்வம் மேன்மையை துறந்த மெய் ஜோதி நீரே ஒருவரும் சேரா ஒளியும் நீரே
அபிஷேக மழையால் நனைப்பவர் நீரே அக்கினி அபிஷேகரே யேகோவாயீர யேகோவா நிசியே எளியோன் என்னை என்றும் தள்ளாதிரும்