இறைவா எனக்கொரு ஆசை
iraivaa enakkoru aasai
இறைவா எனக்கொரு ஆசை - 2 உனை முகமுகமாய் நான் தரிசிக்கணும் உன் திருப்பதமே நிதம் அமர்ந்திடணும்
அதிகாலைத் துளிவிழும்போது உன் முகம் தெரிந்திட வேண்டும் எழுந்து நான் நடந்திடும் போது உன் கரம் பிடித்திட வேண்டும் வீதியில் வலம் வரும் போது உன் துணை உணர்ந்திட வேண்டும் ( 2 )
தனிமையில் நான் வாடும்போது நண்பனாய் அருகில் வேண்டும் என் ஆசை ஆசை ஆசை நீயே இறைவா என் ஆசை ஆசை ஆசை உன் இல்லம் தலைவா ( 2 )
கேள்விகள் எனில் எழும்போதுபதில்கள் நீ தரவேண்டும் தவறுகள் செய்திடும்போது மன்னிப்பு வழங்ிட வேண்டும் நம்பிக்கை தளர்கின்ற போது நெஞ்சுரம் நீ தரவேண்டும் ( 2 ) வாழ்க்கையின் அசைவினில் எல்லாம் உன் அருள் பொழிந்திட வேண்டும் - என் ஆசை