இறைமகன் பிறந்தாரே
iraimagan pirandhaarae
இறைமகன் பிறந்தாரே மாட்டுத் தொழுவினில் ஏழைமகன் ஆனாரே மரியின் மடியினில்பிள்ளை முகம் பார்த்தால் அனைவரின் இதயமும் முத்தமிட ஏங்காதோர் அழகு கன்னத்தில் ஆராரிரோ - 2 கன்னிமரி பாலகா ஆராரிரோ ஆராரிரோ - 2 மழலைச் செல்வமே ஆராரிரோ
தொட்டிலுமில்லை தலையணையில்லை தேவன் தலை சாய்த்தார் புல்லணை மீது படைபலமில்லை அணிகலன் இல்லை இராஜன் உறங்குகின்றார் மந்தையின் நடுவில் உன்னை என்னைப் படைத்தவர் அகிலத்தைக் காப்பவர் வையக இருள் நீங்க மனுவுருவாய் ஆனாரே ஆராரிரோ இறைமகன்
மார்கழி குளிரில் பாமரன் குடிலில் விண் நின்று இறங்கி வந்த தேவன் நடுவினில் இடையர்கள் மகிழ அரசர்கள் பணிய காணிக்கை கொணர்ந்தாரே குழந்தை பாதத்தில் மண்ணவர் வியந்திட விண்ணவர் வாழ்ந்திட தொழுவில் மறைந்திடவே குழுவினிலே பிறந்தாரே ஆராரிரோ இறைமகன்