இறைச்சமூகமாய் நாங்கள் வாழவே
iraicchamoogamaay naangal vaazhavae
இறைச்சமூகமாய் நாங்கள் வாழவே இறைவா இறைவா உந்தன் அருள்புரிவாயே
அன்பினைக் கொண்டு பகைமையை வென்று பண்புடனே நாங்கள் வாழ்ந்திடவே ( 2 ) அடுத்தவர் நலனில் அக்கறை கொண்டு அன்புறவில் நாங்கள் வளர்ந்திடவே ( 2 )
நிறை குறையோடு பிறரையும் ஏற்று நிறை மகிழ்வை வாழ்வில் வழங்கிடவே இயேசுவின் வழியில் இலட்சியப் பணியில் இணைந்திருந்து நாங்கள் செயல்படவே ( 2 )
இறையாட்சியில் நம்பிக்கை கொண்டு இறைவாக்குப் பணியை யாம் தொடர்ந்திடவே ( 2 ) புது உலகமைக்க திடமுடன் உழைக்கும் புதுபடைப்பாய் நாங்கள் செயல்படவே