இராஜா இராஜா என் இயேசு
iraajaa iraajaa en yesu
இராஜா இராஜா என் இயேசு ராஜா என்னை நீர் ஆண்டு கொண்டீர்
வாயின் வார்த்தைகளும் இதயத்தின் தியானங்களும் உமது சமூகத்திலே பிரியமாகட்டும்
காலை மாலையிலும் இரவு நேரத்திலும் எந்தன் நினைவெல்லாம் பிரியமாகட்டும்
பல்லவி
செல்லும் இடமெல்லாம் என் கண்ணின் பார்வைகள் உமது பார்வைக்கு பிரியமாகட்டும்
கண்ணீர் ஜெபமெல்லாம் உமது சமூகத்திலே பதில் தரும் ஜெபமாக என்றும் விளங்கட்டும்
சென்ற காலமெல்லாம் என்னை காத்தீரே உந்தன் நாமத்திற்கு மகிமையாகட்டும்
பரிசுத்தம் நீதி உண்மை பரலோக தேவனே எந்தன் வாழ்வினிலே என்றும் காணட்டும்
பல்லவி
செல்லும் இடமெல்லாம் என் கண்ணின் பார்வைகள் உமது பார்வைக்கு பிரியமாகட்டும்
பாடும் பாட்டெல்லாம் உமது நாமத்திற்கே மகிமையுண்டாக என்று சொல்லட்டும்
செய்யும் வேலையெல்லாம் நிறைவாய் செய்திடவே உமது கிருபை என்னில் என்றும் தங்கட்டும்