இப்பூவினில் யேகோவா
ippoovinil yegovaa
இப்பூவினில் யேகோவா என் சகாயரே இப்பூவினில் என் தெய்வம் என்னை நடத்தி ஒன்றுமில்லாத என் கிலேசத்தை தகர்த்தீர் இப்பூவினில் யேகோவா என் சகாயரே
1.ஆகாரினைப் போல நான் அழுகையில் யாக்கோபினைப் போல நான் அலைகையில் மாறுபூமியில் எனக்கு ஜீவஜலம் தந்தீரே இப்பூவினில் யேகோவா என் சகாயரே
2. பேதுருவைப் போல நான் மறுக்கையில் சீஷர்களைப் போல நானோடுகையில் சிநேகிதரே என்றழைத்து மார்போடு அணைத்தீரே இப்பூவினில் யேகோவா என் சகாயரே
3. பரதேசியாய் நான் பரமன் அன்பை விட்டேனே நாடும் வீடும் விட்டு நான் அலைந்தேனே சொந்த வீட்டில் சேர்த்து கொள்வேன் என்றுரைத்த நாதரே இப்பூவினில் யேகோவா என் சகாயரே