இப்பூவினில் நம் இயேசுவே
ippoovinil nam yesuvae
இப்பூவினில் நம் இயேசுவே - தேடியே மீட்க வந்தார் (2) விண்ணோர்களும் பண்பாடவே(2) விந்தையாய் இயேசுவே வந்துதித்தார் (2)
1. அருணோதயம் பூவில் தோன்றினதே பாதை காட்டிடவே (2) தாவீதின் வேரில் தோன்றினவர் தேவ பாலன் இவர் (2)
2. ஆலோசனை கர்த்தர் நாமமிதே வல்ல தேவன் இவர் (2) கர்த்தத்துவம் அவர் தோளில் உண்டே பாதம் போற்றிடுவோம் (2)
3. அல்லேலூயா நாம் பாடுவோம் மீட்பர் பாரில் வந்தார் (2) இம்மானுவேலரை நம் தேவனை வாழ்த்தி போற்றிடுவோம் (2)