இப்போ பகல் சென்று இரவாயிற்றே
ippo pagal sendru iravaayitre
1. இப்போ பகல் சென்று இரவாயிற்றே என்னோடு நீர் தங்கில் என்றும் அஞ்சிடேன்.
2. இன்ப நித்திரையை இளைப்புற்றோர்க்கு கருணையாய்த் தந்து கண் பாரும் நாதா.
3. நாங்கள் படுக்கையில் நன்றாய்த் தூங்கையில் நல் தூதரின் காவல் நடக்கச் செய்யும்.
4. கர்த்தாவின் பார்வையில் சுத்தனாய்த் தோன்றி விடியற் காலையில் விழிக்கச் செய்யும்.
5. கனம் மேன்மை புகழ் பிதா குமாரன் ஆவிக்கே சதாவும் உண்டாவதாக. ஆமென்.