இன்னும் வேண்டுமோ உனக்கொரு
innum vendumo unakkoru
இன்னும் வேண்டுமோ உனக்கொரு பாடல் எழுது மகனே என்றார்-என்
நாமம் மகிமைபெற செல்லுமிடமெல்லாம் பாடு மகனே என்றார்
நல்ல மேய்ப்பன் என் பாடல் உனக்குத் தினம் நம்பிக்கை தந்துவிடும்-என் வார்த்தையில் தினமும் கீழ்ப்படிந்தால் உனக்குச் சீரிய வாழ்வமையும்
உவமைகளால் என் உதட்டினைத் தினமும் உனக்காய்த் திறந்து வைப்பேன்-அந்த
உண்மை நிலை உணர்ந்து உலகில் வாழ்பவர்க்கு உன்னதப்பாட்டெழுது
நன்மை கிருபைகளை நாளும் உனக்காக தந்திட நான் மறவேன்-தினம் என்னை இயேசுவென மகிழ்ந்து பாடுமுந்தன் மனக்குறை நான் அறிவேன்