இன்னும் சந்தேகிப்பேனோ
innum sandhegippeno
இன்னும் சந்தேகிப்பேனோ இன்னும் சந்தேகிப்பேனோ ஜீவனுள்ள தேவனை நான் இன்னும் சந்தேகிப்பேனோ
ஆபிரகாம் ஈசாக்கின் யாக்கோபின் தேவனை அல்லோ - 2 வாக்கு மாறாதவர் நம்பினோரை காப்பவராம் அல்லேலூயா துதி - இன்று
ஏழை எந்தன் மீட்டு வேண்டிய கிருபை ஈந்து வெளிச்சத்தின் பிள்ளையாக ஜீவிக்க கிருபை செய்து. இருளின் தூதனின் அஸ்திரங்கள் அணுகாமல் காத்தார் அல்லேலூயா! துதி - இன்று
பாவம் அனைத்தும் நீங்கி நீதிக்குப் பிழைக்கும்படி பாவியின் பாவங்களை பாரக் குருசினில் தீர்த்தர் அப்பா பிதா வென்றிடும் ஆவியையும் ஈவாய் தந்தார் அல்லேலூயா! துதி -- இன்று
சமாதான காரணராம் நடு மதிலைத் தகர்த்தவராம் அந்நியமான என்னை அண்டி வந்து காத்தவராம் மாறாத மீட்பர் நான் என்றென்றும் துதித்திடுவேன் அல்லேலூயா! துதி - இன்று
சத்திய மென்னும் கச்சை நீதியென்னும் மார்கவசம் ஆயத்த பாதரட்சை விசுவாசக் கேடகமும் ரட்சண்யத் தலைச்சீராவும் ஆயுதங்களாகத் தந்தார் அல்லேலூயா! துதி - இன்று