இன்னிசை கீதங்கள்
innisai geedhangal
இன்னிசை கீதங்கள் பாடிடுவோம் மன்னாதி மன்னவா கண்வளராய் மன்னன் தாவீது குலக்கொழுந்தே அன்பின் சோரூபியே கண்வளராய்
பல்லவி
தாலேலோ (3) தாலேலோ ... (3) தாலேலோ ... (3)
தேனே திகட்டாத தெள்ளமுதே கோனே குருபரா கண்வளராய் வானம் புவியாளும் பேரொளியே ஞான மணவாளா கண்வளராய்
பல்லவி
தாலேலோ (3) தாலேலோ ... (3) தாலேலோ ... (3)
மன்னுயிர் மீட்கவே வந்த தேவா இன்னுயிர் ஈந்திட பூமியிலே மானிடனாய் வந்த மனுவேலா தேவாதி தேவா நீ கண்வளராய்
பல்லவி
தாலேலோ (3) தாலேலோ ... (3) தாலேலோ ... (3)