இன்னமும் தாமதமேன்
innamum thaamadhamen
இன்னமும் தாமதமேன் கிருபையின் தொனி ஒலிக்குது
மின்னல் போல ஆயுள் போகுமா பின்னே பின்னே யென உரைப்பது எந்நாளும் இயேசுவைச் சேருமே இனி இன்னமும் தாமதமேன்
1. யௌவனமும் போகுமே அழகுமதனோ டழியுமே யாதொரு வாதமும் கூறாதே சாத்தானின் வலைக்குள்ளாகாதே வாருமே பரண் பாதமே பணிவாய் வந்து சேர்ந்திடுமே - இன்
2. தருணமிதுவே தயாபரன் கரம் தோன்றுதே தாயே உன் அண்டை வந்தாரே பாவியே இவ்வன்பை பாருமே பாதகமாகவே மாண்டார் அந்தப் பாடுக ளுனக்காயே - இன்
3. உன்னை அழைக்கிறார் உன் நிலைமை முற்றும் அறிவார் முன்னாள் உன் வினை தீர்க்கும் பின்னாக முற்றிலும் காக்கவும் மண்ணாண உன்னை விண் சேர்க்கவுமவர் மாண்டா ரே கல்வாரியில் - இன்
4. வேண்டாமென்றும் எண்ணமோ? வேகமாய் வாசல் மூடும் வேதனை தான் உந்தன் பங்கையோ வெறுத்தால் இந்த பாக்கியம் இயேசுவே உன் பாரம் தீர்க்கவே எழுந்து முன்னே சென்றிடாயோ - இன்