இன்னமும் தாமதமேன்
innamum thaamadhamen
இன்னமும் தாமதமேன் இன்பச் சத்தம் கேளாயோ இன்னலின்று காத்திட இன்றுன்னை அழைக்கிறாரே
ஜீவனின் அதிபதி இயேசுவண்டை நித்திய ஜீவன் உண்டே நீங்கிடா அவர் அன்பையே நாடி நீ வந்திடாயோ
1. கல்வாரி மேட்டினிலே கரங்களை விரித்தவராய் காத்து உன்னை இரட்சித்திட கனிவுடன் அழைக்கிறாரே
2. லோகத்தின் இன்பமெல்லாம் மாறிடும் ஷணப்பொழுதில் மாறிடா நேசர் இயேசு மாண்புடன் அழைக்கிறாரே
3. நாளை உன் நாளாகுமோ நாடாயோ நாதனை நீ நாசலோகை மீட்டிட நாதன் அழைக்கிறாரே
Chords
Key E Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E B C#m E E A B E E A E E B A F#m B E E B F#m C#m E E A B7 E E B F#m C#m E E A B7 E E B F#m C#m E E A B7 E