இன்னம் நீ என்ன
innam nee enna
இன்னம் நீ என்ன செய்கிறாய்? குணப்படாமல், தாமதமென்ன?
1. உன்னதத்திலிருந்த நாதன் இந்நிலத் தவதரித்து உன்னை மீட்க வந்தாரல்லவோ – ஓ! பாவி – இன்னம்
2. இரட்சண்ய செய்தி கொண்டு தேவதாசர் வந்து நின்று ஓதுகிறார் நீதியைத் தானே – ஓ! பாவி – இன்னம்
3. ஒவ்வொரு நாளும் உன் காதில் இரட்சிப்பின் தொனி தொனிக்க இன்னமும் நீ தாமதிப்பதேன்? – ஓ! பாவி – இன்னம்
4. தோழர்கள் தூஷிப்பாரென்று தூரமாக நீ நில்லாதே ஆவலோடெழுந்து வாராயோ – இரட்சிப்படைய – இன்னம்
5. பகிரங்கமாக இயேசு உன் பாவத்தைக் காட்டும் நாளில் பாவ மன்னிப்புக் கிடையாதே – ஓ! பாவி – இன்னம்