இனியும் காலம் செல்லாது
iniyum kaalam sellaadhu
இனியும் காலம் செல்லாது அறிவாயே இயேசு சொன்ன மொழி மறந்தாலே அழிவாயே உன்னிடத்தில் தேடுவது மனமாற்றம் இயேசு உன்னில் வந்தால் உன் வாழ்வு புது திருப்பம்
மின்னல் தோன்றி மறையும் முன்னே இயேசு வருவார் மணவாளனோடு சிலர் சென்றிடுவார் ஒரு கூட்டம் சிரிப்பார் மறு கூட்டம் அழுவார் எந்த கூட்டம் நடுவில் நீ இருப்பாய் _ இனியும்
ஆயிரம் ஆண்டுகள் ஆட்சி வரும் இந்த அகிலமே இயேசுவின் கையில் வரும் அரியணை ஒன்றில் என் இயேசு அமர்ந்து அவரோடு பரிசுத்தர் ஆட்சி செய்வார்_ இனியும்