இனிமை இனிமை இது இனிமை
inimai inimai idhu inimai
இனிமை இனிமை இது இனிமை மகிமை மகிமை புது மகிமை இயேசுவின் மார்பில் நான் சாய்ந்து கொண்டிருந்தால் இந்த நாள் முழுவதும் இல்லை தனிமை 3
1. காலையும் மாலையும் புது கிருபை கண்ணின் மணிபோல காக்கும் கிருபை இறுதி வரைக்கும் வரும் கிருபை நிலைத்திருக்கும் நம் தேவ கிருபை – இனிமை
2. மலைகள் விலகினாலும் மாறா கிருபை மன்னன் இயேசு வாக்களித்த வல்ல கிருபை பர்வதங்கள் பெயர்ந்து பயங்கரம் சூழ்ந்தாலும் பரிசுத்தவான்களைக் காக்கும் கிருபை – இனிமை
3. அனாதி சிநேகத்தால் வந்த கிருபை ஆயிரம் தலைமுறை காக்கும் கிருபை அழகிய தேவ குமாரன் இயேசு அளித்திட்ட அதிசயமான கிருபை – இனிமை
4. வனாந்தர வழிதனில் வந்த கிருபை வழி தப்பிப் போனோரைக் காக்கும் கிருபை வல்லமையுள்ள தேவனின் ஆவி வரம் தந்து காத்திட்ட தேவ கிருபை – இனிமை