இனி தீங்கை காணாதிருப்பாய்
ini theengai kaanaadhiruppaay
இனி தீங்கை காணாதிருப்பாய் கர்த்தர் உந்தன் நடுவில் உண்டு -2
கலங்காதே திகையாதே-2 உன்னை அழைத்தவர் நடத்திடுவார் -2
கடந்த நாளில் சிந்திய கண்ணீர் இனிமே நீயும் சிந்துவது இல்லை -2 உந்தன் கண்ணீரும் துருதியில் உண்டு -2 அழைத்தவர் உன்னை தேற்றிடுவார் -2
வரண்ட வாழ்க்கை நடந்தது போதும் ஜீவ பாதையில் நடத்திடுவாரே -2 கசந்த வாழ்க்கையும் மகிழ்ந்திடுதே -2 மதுரமாம் இயேசு துணையும் உண்டு -2
துன்பம் தொல்லைகள் உன்னை சூழ்ந்த போதும் அன்பர் இயேசு அரவணைத்தாரே -2 நேச அன்பை உனக்கும் அளித்தார் -2 மார்பினிலே உன்னை அணைத்து விடுவார் -2