இனி நான் அல்ல பிழைப்பதென்னிலே
ini naan alla pizhaippadhennilae
இனி நான் அல்ல பிழைப்பதென்னிலே கிறிஸ்தேசுவே என்னில் ஜீவிக்கிறார்
அனுதினம் நான் சிலுவையிலே அறையுண்டு ஜீவிக்கின்றேன் பால் மரித்தவனாய் திருச்சித்தமே நிறைவேற்றுவதென் ஆகாரமே மா
கிறிஸ்துவுடன் மரணமதின் சாயலில் இணைந்ததிலே அபிஷேகத்தால் உயிர்த்தெழுந்து நவஜீவனிலே நடந்திடுவேன்
திரையகன்றே சரீரத்தில் மா பரிசுத்த ஸ்தலம் வரவே வெறுத்திடவே சுயமென்னிலே தரிப்பேன் கிறிஸ்துவின் சிந்தையதே
கிருபையிலே நிதம் நிலைத்தே திருமுகம் தரிசிக்கவே கிறிஸ்துவின் நல்ல நிறைவதனை பெறவே விரைந்தே தொடர்ந்திடுவேன்
தம்மை பலியாய் சிலுவையிலே தந்த இவ்வன்பினையே நினைக்கையிலே அகந்தனிலே எனக்கோர் மேன்மை வேறில்லையே