இன்றுவரை ஜெயம் தந்த
indruvarai jeyam thandha
இன்றுவரை ஜெயம் தந்த தேவனுக்கு ஸ்தோத்திரம் இதுவரை நடத்திய இரட்சகரே ஸ்தோத்திரம் இனியும் கிருபையால் நடத்திடுமே இனிமேலும் நடத்திடும் திரு சித்தம் போல்
நின்றதல்ல நாம் தேவன் நம்மை நிறுத்தியதால் நிறைந்தெல்லாம் தேவன் தாமே தந்ததினால் நடத்திய விதங்கள் நினைக்கும்போது நன்றியோடு நாதனை துதித்திடுவோம்
சார்ந்திருந்தது அஸ்தமித்து போகும்போதும் சகோதரரும் அகன்றுதான் மாறும் போதும் அன்பினால் மீட்டெடுத்த இயேசு ராஜன் அனைத்திலும் ஜெயமுடன் நடத்திடுவார்
உயர்த்தவிடேன் என்று சத்திரு வாதிடும் போது உடைத்திடுவேன் என்று தொனி முழங்கும் போது கிரியையில் பெரியவர் இயேசு ராஜன் கிருபையால் ஜெயதொனி முழங்க செய்தார்