இன்றே சுத்தமாவோம்
indrae suthamaavom
இன்றே சுத்தமாவோம் உறைகின்ற பனி போல வெண்மையாவோம் ஐயா உம் திரு வார்த்தையினால்
அப்பா உம் சமூகத்தின் அப்பங்கள் நாங்கள் ஐயா எப்போதும் உம் திருப்பாதம் அமர்ந்திட ஏங்கித் தவிக்கின்றோம்
உலகத்தின் வெளிச்சம் நாங்கள் உமக்காய் சுடர் விடுவோம் ஆனந்த தைலத்தால் அபிஷேகியும் ஐயா அனல் மூட்டி எரியவிடும்
தூபமாய் நறுமணமாய் துதிகளை செலுத்துகிறோம் எந்நாளும் எப்போதும் எல்லா ஜெபத்தோடும் ஆவியில் ஜெபிக்கின்றோம்.
ஜீவனுள்ள புதிய மார்க்கம் தந்தீர் ஐயா மகா பரிசுத்த கூடாரத்திற்குள்ளே மகிமையில் நுழைந்து விட்டோம்