இந்தவேளை உந்தன் பாதம்
indhavelai undhan paadham
இந்தவேளை உந்தன் பாதம் இந்த தூசியை -2 உந்தன் அடிமை என்றேதான் தாழ்த்துகிறேன் யான் -2
எந்தன் நீதி இவ்வுலகில் ஒன்றுமில்லாத -2 கந்தை என்று கர்த்தா என்னைத் தாழ்த்துகிறேன் யான் -2
பெருமை பேராசை நீங்க பேதையாம் என்னை -2 வெறுமையாக்கி உம்முன்பு தாழ்த்துகிறேன் யான் -2
நின்மகிமை நினக்கே செலுத்தி நின்பாதம் -2 என்மகிமை எண்ணாதென்னைத் தாழ்த்துகிறேன் யான் -2
நான் என்ற அகங்காரம் அடியோடு நீங்க -2 ஊன் உதிரப் பெருமையற்றுத் தாழ்த்துகிறேன் யான் -2
என்னால் ஒன்றும் இயலாது இப்பூமியிலே -2 உம்மாலன்றி என்று என்னைத் தாழ்த்துகிறேன் யான் -2
பவனி வந்த கோவேறு கழுதையிலும் யான் -2 அவனியில் அற்பனென்றென்னைத் தாழ்த்துகிறேன் யான் -2
தந்தருள்வீர் எந்தனுக்குத் தாழ்மையின் ஆவி -2 இந்தப்பாரில் எல்லார் முன்பும் தாழ்ந்து போகவே - 2