இந்தக் கோலம் கொள்ளலாமா
indhak kolam kollalaamaa
இந்தக் கோலம் கொள்ளலாமா ? ஏதுக்கழுகிறாய், ஏழை என் செய்வேன்? அந்தோ புல் உறுத்துகிறதோ ? ஐயனே நீ கண் வளராய் .
மூடக் கந்தை கூட இலையோ ? மூவுலகைக் காக்கும் இரட்சகா நீ அழுதால் நாடு உன்னை நகைக்காதோ? நாதனே நீ கண் வளராய் .
வானக் கீதம் கேட்ட உனக்கு நான் பாடும் பாட்டு நன்றாய் இல்லையோ ? கானில் கொண்டல் வீசுகிறதோ? கர்த்தனே நீ கண் வளராய் .