இந்தக் காலையைக் காணச் செய்ததால்
indhak kaalaiyaik kaanas seydhadhaal
இந்தக் காலையைக் காணச் செய்ததால் தேவரீருக்கு ஸ்தோத்திரம் பகல் முழுவதும் பத்திரமாக பாதுகாத்திடும் தேவனே
கடந்த ராத்திரி முழுவதும் என்னை கண்மணி போல காத்தீரே காலையைக் கண்டு களித்தர் செய்த மன்னன் இயேசுவே ஸ்தோத்திரம்
உமது பாதையை நாடிப் பின்செல்ல தேவரீர் எனக்கு அருள் செய்யும் உமது பாதையை விட்டு விடாமல் நிலைத்திருக்கவே செய்திடும்
தேவரீர் வைத்த மாதிரிகளை நானும் நாடியே பின்செல்ல உமது மாதிரியாகவே நானும் ஜீவித்து உம்மைக் காண்பிக்க
திருச்சித்தமதை நானும் நாடியே உம் சித்தம் செய்ய அருள்செய்யும் உம் சித்தப்படி ஜீவித்து நானும் பரலோகத்தில் பிரவேசிக்க