இந்த உலகம் சொந்தமில்லையே
indha ulagam sondhamillaiyae
இந்த உலகம் சொந்தமில்லையே - நமக்கு இந்த உடலும் சொந்தமில்லையே சொந்தம் உலக சொந்தம், நம் சொந்தமாகுமா பந்தம் சொந்த பந்தம் அது ஒன்று சேருமா - என்றும் ஒன்று சேருமா
பெற்றவளும் மகிழ்ந்திருப்பாள் பிள்ளையாக இருக்கையிலே மற்றவரும் மகிழ்ந்திருப்பார் மழலைப் பேச்சுக் கேட்கையிலே ஒரு நாளும் மாறாதது அன்பு தான் மறையாதது இயேசுவின் அன்பு ஒன்று தான்
சொத்து சுகம் இருக்கையிலே சொந்தமெல்லாம் தேடிவரும் நித்தம் நித்தம் நம்மை சுற்றி கோடி உறவு ஓடி வரும் இவ்வளவு சொந்தம் எல்லாம் இல்லை என்றால் ஓடிவிடும் - பணம் இயேசுவின் அன்பு மட்டும் இறுதிவரை கூட வரும் சிலுவையில் ஜீவனை தந்துதான் உன்னையும் இயேசுதான் சொந்தமாக்கினார்