இந்த உலகம் என்னை வெறுக்கையிலே
indha ulagam ennai verukkaiyilae
இந்த உலகம் என்னை வெறுக்கையிலே நீரே என்னை அணைத்தீரே -2 என் வாஞ்சை விருப்பம் எல்லாம் உம்மையே சுற்றுதே -2
ஆ.....ராதனை -4
மலைகள் விலகி போகும் போதும் நீரோ விலகவில்லை -2 மனிதர் அன்பு மாறும் போதும் நீரோ மாறவில்லை -2
தனிமையில் நடந்து போகும் போதும் தாங்கி நடத்தி வந்தீர் -2 தகப்பனைப் போல தோளில் சுமந்து தாயைப்போல் தேற்றினீர் -2
உமது அன்பு கிருபை ஒன்றே என்னை தொடர்ந்திடுமே -2 அதையே நம்பி உந்தன் பாதம் என்றும் சரணடைந்தேன் -2