இந்த ராத்திரி காலந்தன்னிலும்
indha raathiri kaalandhannilum
1. இந்த ராத்திரி காலந்தன்னிலும் எந்தன் காவலன் இயேசுவே -2 சொந்தமாய் என்னை மீட்ட நாயகா சந்ததம் என்னைக் காக்கிறீர் -2
2. தூங்கிடாமலே காக்கும் நாயகன் தூயவர் எங்கள் இயேசுவே -2 ஏங்கிடாமலே இந்த ராத்திரி தாங்கியே என்அந்தக் காத்திடும் -2
3. தன்னந் தனித்த ஏழையான் உம்மை தரணியில் கெஞ்சி நிற்கிறேன் -2 சின்னம் சிறிய தாசனாம் என்னை மன்னன் இயேசுவே நோக்குவீர் -2
4. ஆறரண்டுபேர் சிறையின் மத்தியில் அரிய காவலன் இயேசுவே -2 அன்பன் பேதுரு ஆறுதல் பெற்ற அதிசயம் செய்த நாயனே -2
5.பாதி ராத்திரி பாடிப் போற்றவே பவுசளித்த என் இயேசுவே பாதி ராத்திரி நானும் பாடிட பவித்திரம் தந்து காத்திடும் -2
6.இந்த ராத்திரி உந்தன் மார்பினில் மைந்தன் யான் தூங்க அருள் செய்வீர் -2 நன்று காலையில் நான் விழித்து உம் தொண்டு செய்திட அருள் செய்வீர் -2