இந்த ஆண்டின் நன்மை யாவும்
indha aandin nanmai yaavum
இந்த ஆண்டின் நன்மை யாவும் உந்தன் வாழ்வில் பலிக்குமே இதயம் நிறைந்து துதித்திடுவோம் இயேசு ராஜனையே
நல்லவர் இயேசு வல்லவர் அவர் மாட்சிமை உள்ளவரே
1. எல்லாவற்றிலும் ஜெயம் தந்திடுவாரே கண்ணீரின் ஜெபத்தை தள்ளவேமாட்டார் எதிர்பார்க்கும் நன்மைகளை தந்திடுவாரே கரம் தட்டி பாடிடுவோம்
2. பொல்லாப்பும் வாதையும் அணுகிடாதே கரங்களினால் நம்மை தாங்கிடுவாரே செட்டையின் மறைவில் மறைத்துக் கொள்வார் – அடைக்கலம் புகுந்திடுவாய்
3. சத்துரு எய்திடும் ஆயுதங்களை ஒன்றையும் வாய்த்திடாமல் செய்திடுவாரே உந்தனின் வாழ்வினில் ராஜா அவரே தீங்கை இனி காணமாட்டாய்