இன்பலோக யாத்திரையோர்
inbaloga yaathiraiyor
1. இன்பலோக யாத்திரையோர் நாம் அங்கே பாவ மில்லையாம்; அங்கே வீரர் ஆர்ப்பரிப்பார் அங்கே கண்ணீ ரில்லையாம்
ஜீவ ஆற்றின் கரையில் சந்திப்போம் சந்திப்போம்; ஜீவ ஆற்றின் கரை யோரம், போர் முடிந்ததின் பின்பு
2. நண்பர் நாம் இங்கே பிரிவோம், அன்பரும் சாகுவாரே; ஆனால் திரும்பக் கூடுவோம் ஜீவ ஆற்றின் கரை யோரம்
3. இங்கே யுத்தத்தில் நிலைப்போர் அங்கே கிரீடம் பெறுவார்; இங்கே துன்பங்கள் சகிப்போர், இன்பக் கீதம் பாடுவார்